காலத்தால் அழியாத மிகச் சிறந்த பழைய பாடல்களின் தொகுப்பு இந்த என்றும் இனிமை நிகழ்ச்சி. பல்வேறு பண்டிகை நாட்களிலும், விடுமுறைக் கொண்டாட்டங்களிலும் புதிய படங்களிலிருந்து இடம்பெறும் பாடல்களை நாம் ரசிக்க இயலும். ஆனால் ஆண்டுகள் பல கடந்தாலும், சுவை குன்றாத இத்தகைய பாடல்களை ஒரு தொகுப்பாக வழங்கும் நிகழ்ச்சி இது.
ஒரு குறிப்பிட்ட நடிகர் இடம்பெற்ற பாடல்கள், நடிகை இடம்பெற்ற பாடல்கள், குறிப்பிட்ட இயக்குநரால் படைக்கப்பட்ட பாடல்கள், ஒரு பொது கருத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் என சூழ்நிலைக்கேற்ப பாடல்களின் தொகுப்புகள், சிறந்த இணைப்புரையுடன், அழகிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் வாயிலாக படைக்கப்பட்டு நேயர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைவது என்றும் இனிமை.
========
A Compilation of old and new songs is generally done to suit the occasion like festivals, anniversaries and where such situation does not arise songs are selected in a similar wavelength which will keep the audience engrossed.